Death Clock: உங்கள் மரணத்தைக் கணிக்கும் AI செயலி... ஆர்வம் காட்டும் மக்கள்!
சில்க் ஸ்மிதா படத்தின் அறிவிப்பு விடியோ!
நடிகை சந்திரிகா ரவி நடிப்பில் உருவாகும் சில்க் ஸ்மிதா படத்தின் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது.
தமிழ்த் திரையுலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் சில்க் ஸ்மிதா. கவர்ச்சி வேஷங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதை ஹிந்தியில், ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக வெளியானது. சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. சிறந்த ஒப்பனைக் கலைஞர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் என மேலும் இரண்டு தேசிய விருதுகளையும் இந்தப் படம் பெற்றது.
இதையும் படிக்க: புஷ்பா - 2 டிக்கெட் முன்பதிவிலேயே இத்தனை கோடிகளா?
‘டர்ட்டி பிக்சர்: சில்க் சக்கத் ஹாட்’ என்ற பெயரில் கன்னடத்திலும் வெளியாகி, ஹிட் ஆனது. பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், சில்க் வேடத்தில் நடித்தார். மேலும், மலையாளத்திலும் சனா கான் நடிப்பில் ‘க்ளைமாக்ஸ்’ என்ற பெயரில் படமாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று சில்க் ஸ்மிதாவின் 64-வது பிறந்த நாள். இந்நிலையில், தமிழில் நடிகை சந்திரிகா ரவி நடிப்பில் உருவாகும் 'சில்க் ஸ்மிதா குயின் ஆஃப் சௌத்’ (silk smitha queen of south) படத்தின் அறிவிப்பு விடியோவை வெளியிட்டுள்ளனர். 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரிகா ரவி.
இப்படத்தை எஸ்டிஆர்ஐ சினிமா தயாரித்துள்ளது. ஜெயராம் இயக்கியுள்ளார். தமிழ், தெலங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பான் இந்திய்ப படமாக வெளியாக உள்ளது.