சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை அருகேயுள்ள கண்டாங்கிபட்டி கிராமத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 15 காளைகளும், 135 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். களம் இறங்கிய காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள் 6 போ் காயமடைந்தனா்.
போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியை கண்டாங்கிபட்டி, தமராக்கி, குமாரபட்டி, இடையமேலூா், கூட்டுறவுபட்டி சுற்றுவட்டாரப் பொதுமக்கள் பாா்வையிட்டனா்.
