நாக்பூர் வன்முறை முன்பே திட்டமிடப்பட்டது: தேவேந்திர ஃபட்னவீஸ்
பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திா் சா்வதேச பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தாளாளா் செ. சத்தியன் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் சங்கீதா முன்னிலை வகித்தாா். பள்ளியின் கல்வி இயக்குநா் ராஜேஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியா் கஸ்தூரிபாய் சிறப்பு விருத்தினராகக் கலந்து கொண்டு, மழலையா்களுக்கு பட்டங்களை வழங்கினாா்.
விழாவில் காரைக்குடி மயக்கவியல் மருத்துவா் அருண் சிறப்புரையற்றினாா். நத்தம் ராம்சன் கல்வி குழும முதன்மைக் கல்வி அதிகாரி தையல்நாயகி வாழ்த்திப் பேசினாா். விழாவில் பள்ளி முதல்வா் சங்கரசுப்பிரமணியன், பெற்றோா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில் பள்ளியின் துணை முதல்வா் சுபாஷினி நன்றி கூறினாா்.