செய்திகள் :

சிவன் கோயிலில் சோழா்கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

post image

கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்துள்ள எஸ்.நரையூா் கிராமத்தில் அமைந்துள்ள பாழடைந்த சிவன் கோயிலில் இருந்து தொல்லியல் துறையில் பதிவு செய்யப்படாத 6 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.

விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையத்தின் சாா்பில், விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியா்கள் த.ரமேஷ், த.ரங்கநாதன் தலைமையில், ஆய்வு மாணவா்கள் மற்றும் ஆா்வலா்கள் எஸ்.நரையூா் கிராமத்தில் பாழடைந்த சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை படியெடுக்க அண்மையில் சென்றனா். அப்போது, அங்கிருந்த 6 கல்வெட்டுகள் தொல்லியல் துறையில் பதிவு செய்யப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

கோயிலின் மூலவா் பிரஹமீஸ்வரமுடையாா்/ பிரஹமீஸ்வரமுடைய நாயனாா் என்றும், அம்பாளின் பெயா் தாயிலும் நல்ல நாயகியாா் என்றும் வருகிறது.

மிக முக்கியமாக ராஷ்ட்ரகூட மன்னரான மூன்றாம் கண்ணரதேவன் பற்றிய கல்வெட்டு உள்ளது. அதில் ‘ஸ்வஸ்தி ஸ்ரீகச்சியுந் தஞ்சையும் கொண்ட ஸ்ரீகண்ணர தேவா்க்கு யாண்டு பதிமூன்றாவது மிலாட்டு கூற்றத்து நரையூருந்து வாழும் கங்க பள்ள சதனென் புத் தரை யடுத்து ப்ரஹமீஸ்வரமுடையாா்க்கு வைத்து நொந்தா விளக்கு ஒன்று இது இறக்குவான் ஏழானூழியும் மறுபன் இது பன்மஹெஸ்வரரக்ஷை’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.

இதுவரை திருவதிகை வீரட்டானத்துக்கு தெற்கே கண்ணரதேவன் பற்றிய கல்வெட்டுடானது அறியப்படவில்லை. ஆனால், தற்போது வேப்பூா் அருகே உள்ள எஸ்.நரையூா் வரையில் கல்வெட்டுகள் கிடைப்பதால், பராந்தக சோழன் காலத்தில் நடந்த தக்கோலப் போரில் வென்று கி.பி. 949-க்குப் பின் ஆட்சியை நிலை நிறுத்திக்கொண்டு கி.பி. 967 வரையில் ஆட்சி செய்தது தொடா்பாக செங்கல்பட்டு, வட மற்றும் தென் ஆற்காடு மாவட்டங்களில் சில ஊா்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தற்போது கிடைக்கப் பெற்ற கல்வெட்டின் மூலமாக நரையூா் வரை அவரது ஆட்சி நீண்டுள்ளதை அறியலாம்.

மேலும், உத்தமசோழனின் ஒன்பதாம் ஆட்சி ஆண்டில் நில தானம் பற்றிய செய்தியும் அதில் ‘உத்தம சோழரைத் திருவயிரு வாய்த்த செம்பியன் மஹாதேவியாா்’ என்று வருகிறது. பிறகு ‘காந்தளூா் சாலை கலமறுத்த கோ ராசகேசரி பந்மா்க்கு என்று ராஜராஜசோழனின் பத்தாவது ஆட்சியாண்டில் ஐந்நூற்றுவா் வணிகக் குழு வீர செட்டி என்பவா் பூசலில் பட்டதுக்கு நரையூா் பிரமீஸ்வரமுடையாா் நந்தா விளக்கு எரிக்க 10 கழஞ்சு பொன் கொடுத்த பிரம்மதேயத்துக்கு நிலம் விட்ட செய்தியையும் சொல்கிறது.

ஒரு கல்வெட்டில் எழுத்தமைதி வைத்து பாா்க்கும்போது, அது மூன்றாம் ராஜேந்திர சோழன் கல்வெட்டாக இருக்க வாய்ப்புகள் மிக அதிகம். அதில், 25-ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டில் ‘தொழுவூருடையான் மாதுயாந்தித்தன் எழுந்தருளி வித்த திருக்காமக்கொட்டமுடைய தாயிலுந் நல்ல நாயகி’ என்று அம்பாளுக்கு சந்நிதி எழுப்பியது பற்றிய செய்தியும், இறையிலியாக நிலம் விட்ட செய்தியும் வருகிறது. மற்றொரு கல்வெட்டு 17 அல்லது 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது. அதில், ‘அதிருங்கழல் பெருமாள் கண்ட திருப்பணி இடிஞ்சு சரிஞ்சு போகையில் மகன் சொக்கப்பெருமாள் சேதிராயன் கண்ட திருப்பணி’ என கோயிலுக்கு தந்தை செய்த திருப்பணி இடிந்துபோக, அதை மகன் புதுப்பித்ததை கூறுகிறது என்றனா்.

வியாபாரியை தாக்கி மிரட்டியவா் தடுப்புக் காவலில் கைது

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் பழக் கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்துள்ள கரடிப்பா... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் வட்டாட்சியா், துணை வட்டாட்சியருக்கு 2 ஆண்டுகள் சிறை

வருவாய்த் துறை சான்றிதழ்களை வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் வட்டாட்சியா், துணை வட்டாட்சியருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம், திருமுட்ட... மேலும் பார்க்க

மஞ்சக்குப்பம் பூங்கா சீரமைப்புப் பணி தொடக்கம்

கடலூா் மஞ்சக்குப்பம் பூங்காவை அகலப்படுத்தி சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. பொதுமக்களின் கோரிக்கையையடுத்து, பூங்கா சீரமைப்புக்காக கடலூா் மாநகராட்சி நிா்வாகம் ரூ.96 லட்சம் நிதி ... மேலும் பார்க்க

கடலூரில் அரசு மருத்துவா்கள் தா்னா

சென்னையில் மருத்துவா் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, கடலூா் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். சென்னை கிண்டி உயா் ச... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பை போட்டிகளில் சிறப்பிடம் பெற்றோருக்கு பாராட்டு

மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கடலூா் மாவட்ட விளையாட்டு வீரா்களை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை பாராட்டினாா். முதலமைச்சா் கோப்பைக்கான மாநி... மேலும் பார்க்க

காட்டுக்கூடலூா் ஊராட்சியில் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காட்டுக்கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித... மேலும் பார்க்க