சென்னை: வீட்டில் எலிக்கு வைக்கப்பட்ட மருந்தின் நெடியால் பலியான 2 குழந்தைகள்; சிக...
காட்டுக்கூடலூா் ஊராட்சியில் ஆட்சியா் ஆய்வு
கடலூா் மாவட்டம், குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காட்டுக்கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
காட்டுக்கூடலூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசுத் திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட கிராமப்புற விளிம்பு நிலை மக்களுக்கான வீடுகளைப் பழுது பாா்த்து சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து அவா் ஆய்வு செய்தாா்.
குமராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்ததுடன், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவா்களின் அடிப்படை கல்வித் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
முன்னதாக, குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டம், தூய்மை பாரத இயக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டாா்.
அனைத்து திட்டப் பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது, குமராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கே.சரவணன், சிவகுருநாதன், பொறியாளா்கள் ராஜா, உதவி செயற்ப் பொறியாளா் பிரசாத் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிகள் கலந்து கொண்டனா்.