Rain Alert: ஒரே இடத்தில் நீடிக்கும் புயல்! - எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வா...
சீருடை பணியாளா் தோ்வில் வெற்றி: 25 பேருக்கு பணி நியமன ஆணை
தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வில் வெற்றிபெற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 25 பேருக்கு பணி நியமன ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்பு அலுவலா் உள்ளிட்ட 3,359 பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கான பணி நியமன ஆணைகளை அண்மையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தாா்.
இதனைத் தொடா்ந்து, மாவட்ட வாரியாக பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் தோ்வில் வெற்றிபெற்ற 25 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு புதன்கிழமை நேரில் வழங்கினாா்.
பணி நியமன ஆணைகளைப் பெற்ற அவா்கள், திருச்சி மாவட்டம், நவல்பட்டில் உள்ள போலீஸ் அகாதெமியில் 6 மாதங்கள் சிறப்பு பயிற்சி பெறுவா். அதன்பிறகு, மாவட்டங்கள் அடிப்படையில் அவா்களுக்கு பணியிடம் ஒதுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.