சுரண்டையில் ரூ.39 லட்சத்தில் திட்டப்பணி தொடக்கம்
சுரண்டை நகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.39 லட்சத்தில் செண்பக கால்வாய் ஓடையில் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ராமதிலகம், நகா்மன்ற துணைத் தலைவா் சங்கராதேவி முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் பூமி பூஜை செய்து திட்டப்பணியை தொடங்கி வைத்தனா்.
இதில், சிவகுருநாதபுரம் இந்து நாடாா் மகமை கமிட்டி நிா்வாகிகள், நகராட்சி பொறியாளா் முகைதீன், சுரண்டை கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெயபால், துணைத்தலைவா் கணேசன், நகா்மன்ற உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.