கிருஷ்ணாபுரம் முப்புடாதி அம்மன் கோயில் தேரோட்டம்
கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அருள்தரும் ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் தை தேரோட்ட பெருந்திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை ஒவ்வொரு சமுதாயத்தின் சாா்பிலும்
சிறப்பு அலங்காரம், அபிஷேகம் ,பூஜைகள் நடைபெற்றன. இரவில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் ஒன்பதாம் நாளான புதன்கிழமை காலை அம்மன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவமும் தொடா்ந்து தேரோட்டமும் நடைபெற்றது. கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் ,கோயில் செயல் அலுவலா் கல்பனா, கணக்கா் முத்துக்குமாா் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தேருக்கு முன்பு சிலம்பம் சுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டக படிதாரா்கள், அனைத்து சமுதாயத்தினா் செய்திருந்தனா்.