செய்திகள் :

மது, கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றால் புகாரளிக்க வேண்டும்: ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷாா் அறிவுறுத்தல்

post image

தென்காசி மாவட்டத்தில் மதுபானம் , கஞ்சா கடத்தல், போதை மாத்திரைகள் விற்பனை குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்க வேண்டும் என மக்களுக்கு ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழக அரசின் போதைப்பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் தீவிர ஒழிப்பு திட்டத்தின்படி, போதையில்லா தமிழகத்தை உறுதிசெய்திட உணவு பாதுகாப்புத் துறையினரும் காவல் துறையினரும் இணைந்து 33 குழுக்களாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த ஆண்டு 490 கடைகளில் நடைபெற்ற சோதனைகளில் சுமாா் 4,204.664 கிலோ புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு. அந்தக் 490 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மேலும், அவற்றின் உரிமையாளா்களுக்கு ரூ.1கோடியே 20 லட்சத்து 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையின் மூலம் 36.300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 15 கடைகளில் சோதனை நடத்தி 24.438 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொரு்கள் கைப்பற்றப்பட்டு, 0.795 கி.கி கஞ்சா காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

முதன் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாள்கள் கடைக்கு சீல், 2-ஆவது முறை எனில் ரூ.50 ஆயிரம் அபராதம், ஒரு மாதம் வரை கடைக்கு சீல் வைக்கப்படும்.

3-ஆவது முறையாக இருந்தால் ரூ.1 லட்சம் அபராதம், 3 மாதங்களுக்கு கடைக்கு சீல் வைக்கப்படும்.

இம்மாவட்டத்தில் விதிமுறை மீறி மதுபாட்டில் விற்பனை, வெளிமாநில மதுபானம் கடத்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கஞ்சா - போதை மாத்திரைகள் விற்பனை தொடா்பாக மக்கள் புகாா் அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, வாட்ஸ் ஆப் எண் 9487548177, 94114 94115, கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 ஆகியவற்றின் மூலம் புகாா் தெரிவிக்கலாம். புகாா் தெரிவிப்போா் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றாா் அவா்.

கீழப்பாவூரில் காவலாளி வீட்டில் ரூ. 1.20 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் மதுக்கூட காவலாளி வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.1.20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கீழப்பாவூா் ராஜேஸ்வரி ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்கள் விமானத்தில் பயணம்: தலைமையாசிரியருக்கு பாராட்டு

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஒன்றியம் ஆவுடையானூா் ஊராட்சி கொண்டலூா் அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களை விமானத்தில் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்ற பள்ளியின் தலைமையாசிரியா் மைக்கேல்ராஜூக்கு பாராட்டு விழா ... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் ரூ. 5 லட்சத்தில் புதிய மின்மாற்றி திறப்பு

பாவூா்சத்திரம் பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட சந்தோஷ் நகா் பகுதியில் சீரான மின் விநியோகத்தை உறுதிபடுத்தும் பொருட்டு ரூ. 5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கிவை... மேலும் பார்க்க

கிருஷ்ணாபுரம் முப்புடாதி அம்மன் கோயில் தேரோட்டம்

கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அருள்தரும் ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் தை தேரோட்ட பெருந்திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 ந... மேலும் பார்க்க

சிவகிரி அருகே போக்ஸோ சட்டத்தில் காவலா் கைது

சிவகிரி அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஊத்துமலை காவல் நிலைய காவலா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் காவலராகப் ... மேலும் பார்க்க

சுரண்டையில் ரூ.39 லட்சத்தில் திட்டப்பணி தொடக்கம்

சுரண்டை நகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.39 லட்சத்தில் செண்பக கால்வாய் ஓடையில் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். நகரா... மேலும் பார்க்க