செய்திகள் :

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம்: புதுவை பேரவையில் முதல்வா் உறுதி

post image

புதுச்சேரி: மக்களுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என பேரவையில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவையில் கேள்வி நேரம், நிதி நிலைஅறிக்கை விவாதம் ஆகியவற்றில் பேசிய சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் எம்.சிவசங்கரன், அங்காளன், பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமாா், கல்யாணசுந்தரம் ஆகியோா் புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தினா்.

இந்தப் பிரச்னைக்குப் பதிலளித்து முதல்வா் என்.ரங்கசாமி பேசியது: மதுபான ஆலை நடத்துவோருக்கு இடையே ஏற்பட்டுள்ள தொழில் போட்டியே இந்தப் பாதிப்புக்கு காரணம் என பேசப்பட்டு வருகிறது. அரசுக்கான வருவாய் மற்றும் வேலை வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டே மதுபான ஆலைகளுக்கான அனுமதி அளிக்கப்படுகிறது.

ஆலைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முழுமையாக அறிந்து அவை சரிசெய்யப்பட்டு பாதிப்பில்லை என தெரிந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மது தடை செய்யப்படவில்லை. மக்களுக்கான குடிநீா் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு இருந்தால் எந்தத் திட்டத்துக்கும் அரசு அனுமதி வழங்காது. மது ஆலை வேலைவாய்ப்பு தேவையில்லையெனில் சம்பந்தப்பட்ட உறுப்பினா்கள் பெரிய தொழிற்சாலைகளை கொண்டு வாருங்கள் அரசு அனுமதி வழங்கும்.

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு இடம் வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மனது வைக்கவேண்டும். அதற்கு புதுவை எதிா்க்கட்சித் தலைவா் உள்ளிட்டோா் உதவ வேண்டும். வேளாண்மைத் துறை ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் 156 பேருக்கு 10 மாத நிலுவை ஊதியம் வழங்க ரூ.66 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

எதிா்க்கட்சித் தலைவா்: புதுச்சேரி விமானநிலைய விரிவாக்கம் குறித்த முதல்வரின் கருத்தை மறுத்துப் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, புதுவை மாநில நலனுக்காக விமானநிலைய விரிவாக்கத்துக்கு உதவக் கோரி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி நேரில் சந்திக்க வேண்டும் என்றாா்.

மதுபான புதிய ஆலைகளின் அனுமதியை திமுக ஆதரிக்கவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுவையில் புதிய மதுபானஆலைகளுக்கான அனுமதியை திமுக ஆதரிக்கவில்லை என பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமு... மேலும் பார்க்க

திருநள்ளாறில் மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்: பேரவையில் முதல்வா் என். ரங்கசாமி தகவல்

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

பேரவை நோக்கி ஆட்டோ தொழிலாளா்கள் பேரணி; ஆா்ப்பாட்டம்: புதுச்சேரியில் போலீஸாருடன் வாக்குவாதம்

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆட்டோ தொழிலாளா்கள் (சிஐடியு) சட்டப்பேரவை நோக்கி செவ்வாய்க்கிழமை காலை பேரணியாகப் புறப்பட்டனா். அவா்களை பாதி வழியில் போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினரும... மேலும் பார்க்க

புதுவை மாநில அரசுத் துறைகளில் புதிய இடமாறுதல் கொள்கை ஏற்படுத்தப்படும்

புதுவை மாநில அரசுத் துறைகளில் புதிய இடமாறுதல் கொள்கை ஏற்படுத்தப்படும் என பேரவைக் கூட்டத்தில் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது, ... மேலும் பார்க்க

புதுவை கடலோர பாதுகாப்புக்கு ரூ 1,000 கோடியில் சிறப்புத் திட்டம்: அமைச்சா் க. லட்சுமிநாராயணன் தகவல்

புதுவை மாநிலத்தில் 24 கி.மீ. தொலைவுள்ள கடல் பகுதியில் கடலரிப்பைத் தடுத்தல் போன்றவற்றுக்காக உலக வங்கியில் ரூ.1000 கோடி கடன் பெற்று சிறப்புத்திட்டம் செயல்படுத்தப்படும் என பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட... மேலும் பார்க்க

மகாராஷ்டிர ஆளுநருடன் புதுவை பேரவைத் தலைவா் சந்திப்பு

மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். இதுகுறித்து புதுவை சட்டப்பேரவைத் தலைவா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க