செய்திகள் :

சூது கவ்வும் 2: ``சந்தோஷ் நாரயணன் Pant போட்டுட்டு வந்தது பெரிய விஷயம்" - சிரிப்பில் அதிரவைத்த சிவா!

post image

சூதுகவ்வும் 2 படத்தின் ஆடியோ லான்ச்சில் சந்தோஷ் நாராயணன், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இவர்களைக் குறித்து கலகலப்பாக பேசினார் மிர்ச்சி சிவா. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை அவரது ஷார்ட்ஸ் போடும் பழக்கத்தைக் குறிப்பிட்டு கலாய்த்தார் சிவா. "சந்தோஷ் மாதிரி ஒரு கேரக்டரை பார்க்க முடியாது. அவருக்கு எல்லாரும் கை தட்டுங்க (கைத்தட்டல்கள்) ஏன் கை தட்டினோம்னா அவர் இன்னைக்கு முதல்முறையா பாண்ட் போட்டுட்டு வந்திருக்கார். அதுவே பெரிய விஷயம் ப்ரோ." என்றார்.

Soodhu Kavvum 2 Audio Launch

மேலும், "இன்னைக்கு அவர் சொன்னதுனால சொல்றேன். நான் அவரை பைக்ல உட்காரவச்சு நிறைய ஆபீஸுக்கு கூட்டிட்டு போயிருக்கேன். எல்லாரும் அவர் மியூசிக் நல்லா இருக்கு சொல்லுவாங்க ஆனா அவங்க படத்துக்கு இது செட் ஆகாது சொல்லிடுவாங்க. ஆனா, எனக்கு என்னைக்கே தெரியும். சந்தோஷ் யூ ஆர் டூயிங் வொண்டர்ஸ், யூ வில் டூ வொண்டர்ஸ்.

ஒருநாள் சந்தோஷுடைய அம்மா கோவில்ல பாடுறதைப் பார்த்தேன். அப்பதான் தெரிஞ்சது, அவருக்கு இந்த இசை எங்கிருந்து வந்ததுன்னு." எனப் பேசினார்.

இயக்குநர்கள் குறித்து பேசுகையில் நலன் மற்றும் கார்த்திக் சுப்புராஜிடம் நைஸாக சான்ஸ் கேட்கவும் தவறவில்லை சிவா, "கார்த்திக் சுப்புராஜ் சார் எனக்கு ரொம்ப பிடிச்ச டைரக்டர், ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் படத்துல நடிக்க முடியாம போயிரும். கார்த்திக், நாம சேர்ந்து ஒன்னு பண்ணணும். சி.வி குமார் சார்... பீட்சா 3,4 எதாவது பாருங்க....

மிர்ச்சி சிவா

நலன் நாம லைஃப்ல முழுக்க சேர்ந்து வேலை செய்ய ஆசைப்படுற ஒரு டைரக்டர்.

நான், பா.ரஞ்சித் எல்லாம் ஒரே நேரத்துலதான் சினிமாவை ஸ்டார்ட் பண்ணினோம். சென்னை 26 படத்தில் அவர் அசிஸ்டண்ட் டைரக்டர், அவர் இந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டு பேசினது ரொம்ப சந்தோஷம்.

சூது கவ்வும் ஒரு கல்ட் ஃபிலிம், இந்த படத்துல கலட்டுறதுக்கு ஒன்னுமே இல்லை.

அது டார்க் ஹியூமர், இது பிரைட்டான ஃபன் ஃபிலிம்." என்றார்.

Coolie: `ஏய்ய்ய் நவுர்றா...' - 'கூலி' படத்தின் க்ளிம்ஸ் வீடியோ இதோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'கூலி'. பரபரப்பாக நடந்து வரும் இதன் படப்பிடிப்பை ஜனவரி மாதத்தோடு முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.இப்படத்தில் தேவா எனும் பாத்திரத்தில் நடித்து வருகிறார்... மேலும் பார்க்க

Keerthy Suresh: `நெஞ்சமே நெஞ்சமே!' - கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணம்

கீர்த்தி சுரேஷூக்கும் அவருடைய நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டிலுக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது.கோலிவுட், டோலிவுட், மாலிவுட் என அனைத்து பக்கமும் பரிச்சயமான கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டிலும் தடம் ப... மேலும் பார்க்க

தளபதி : `ஏன்னா நீ என் நண்பன்..!’ - ஒரு 2K கிட்டின் `தளபதி' ரீ-ரிலீஸ் தியேட்டர் அனுபவம்

ரஜினியின் 74-வது பிறந்தாநாள் இன்று.அதையொட்டி ஸ்பெஷலாக `தளபதி' படத்தை ரீ - ரிலீஸ் செய்திருக்கிறார்கள். `ரீ மாஸ்டர்' செய்யப்பட்ட வெர்ஷனுடன் இத்திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இது ரீ ரிலீஸ் காலம்... மறு ... மேலும் பார்க்க

Rajini: ``பேரன்பிற்குரிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு..'' - பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய்

திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் ரஜினிகாந்த் இன்று தனது 74- வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவி... மேலும் பார்க்க