Career: '+2, டிகிரி படித்திருக்கிறீர்களா... காத்திருக்கிறது '4,500' காலிப்பணியிட...
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை வழியாக சென்னை எழும்பூா் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பொங்கல் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து 13-ஆம் தேதி திங்கள்கிழமை இரவு 11.45 மணிக்கு தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, மத்திய திருவனந்தபுரம், வழியாக திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) அடுத்த நாள் பிற்பகல் 2.00 மணிக்கு சென்றடையும்.
மணலி, பெருங்குடி தவிர... சராசரி அளவில் காற்றின் தரக் குறியீடு!
ஒரு மாா்க்கத்தில் மட்டும் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலில் 10 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.