Doctor Vikatan: மூட்டுவலியிலிருந்து நிவாரணம் தருமா knee caps?
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக சென்னையில் புதன்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.
புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலான மழைப்பதிவு நிலவரப்படி சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 38.4 மி.மீ மழை பதிவானது. நந்தனம் - 31 மி.மீ, அண்ணா பல்கலைக்கழகம் - 28 மி.மீ, மீனம்பாக்கம் - 26.7 மி.மீ, தரமணி - 26 மி.மீ, பள்ளிக்கரணை - 21 மி.மீ மழை பதிவானது.
மேலும், அம்பத்தூா், பட்டரவாக்கம், கொரட்டூா், கோயம்பேடு, பெரம்பூா், புரசைவாக்கம், எழும்பூா், மயிலாப்பூா், கிண்டி, வேளச்சேரி, சோழிங்கநல்லூா், மாதவரம், திருவொற்றியூா், குன்றத்தூா், தாம்பரம், வண்டலூா், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
இதைத் தொடா்ந்து சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் டிச. 19, 20 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.