இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன்ஏஐ நிறுவனம் ஆலோசனை!
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 2 நிரந்தர நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள இரண்டு கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
தில்லியில் நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணிபுரிந்து வரும் நீதிபதி வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன் மற்றும் நீதிபதி பெரியசாமி வடமலை ஆகியோரை நிரந்தர நீதிபதியாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2023 பிப்ரவரி மாதம் நீதிபதி லட்சுமிநாராயணனும் மார்ச் மாதம் நீதிபதி பெரியசாமி வடமலையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
இதையும் படிக்க : அமெரிக்காவிலிருந்து 104 இந்தியர்களுடன் அமிர்தசரஸ் வந்த ராணுவ விமானம்
அதேபோல், தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 3 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் கொலீஜியத்தின் பரிந்துரைகள் மத்திய சட்டத்துறை வாயிலாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பப்பட்டு விரைவில் ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.