"LIC இணையதளம் இந்தி திணிப்பிற்கான கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது"- முதல்வர் ஸ்ட...
சென்னை உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!
அறப்போர் இயக்கத்திற்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜரானார்.
நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக, முன்னாள் முதல்வரும், அத்துறையின் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.
இதனை எதிர்த்து, எடப்பாடி கே. பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவிக்கக்கூடாது என்று அறப்போர் இயக்கத்துக்கு முன்னதாக உத்தரவிட்டது.
இதையும் படிக்க: ராணி லட்சுமிபாயின் துணிச்சல், தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கிறது: பிரதமர்
இந்நிலையில், இவ்வழக்கு இன்று(நவ. 19) விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மகாலட்சுமி முன்பு எடப்பாடி பழனிசாமி ஆஜரானார்.
நேரில் ஆஜரான, எடப்பாடி பழனிச்சாமி, இவ்வழக்கு தொடர்பான சாட்சியங்களை சமர்ப்பித்து விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணை வரும் டிச. 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.