செய்திகள் :

சென்னை: தனியார் பள்ளியில் அமோனியா வாயு கசிவா? - 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கம்... நடந்தது என்ன?

post image

சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியொன்றில் அமோனியா வாயு கசிந்ததாக 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கமடைந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பாகத் தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புப் படை உடனடியாக பள்ளிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதோடு, காவல்துறையினரும் பள்ளிக்கு விரைந்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.

மயக்கமடைந்த மாணவிகள்

முதற்கட்ட விசாரணையில், பள்ளியின் வேதியியல் ஆய்வகத்திலிருந்து அமோனியா வாயு கசிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மறுபக்கம், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பலர் பள்ளி நிர்வாகம் மெத்தமானதாகச் செயல்பட்டதாகக் கூறி பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதற்கிடையில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி பள்ளிக்கு நேரில் வந்து பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கலாநிதி வீராசாமி, ``நாங்கள் முதலில் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தோம். அங்கிருக்கும் மாணவிகளில் பெரும்பாலானோர் வீட்டுக்குத் திரும்பிவிட்டனர். போலீஸார், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பள்ளிக்கு வந்திருக்கிறார்கள்.

கலாநிதி வீராசாமி

பள்ளியின் மூன்றாவது மாடியில் மூன்று வகுப்பறைகளில் இந்தப் பிரச்னை இருந்ததாகக் கூறினார்கள். பள்ளி ஆசிரியர்களிடம் இதுபற்றி கேட்டபோது, மதியவேளையில் இது நடந்திருப்பதாகவும், தாங்களும் அதை லேசாக உணர்ந்ததாகவும் தெரிவித்தனர். அதோடு, உடனடியாக மாணவிகளைக் கீழே இறக்கிவிட்டதாகவும் கூறினர். இப்போதைக்கு, அதிகாரிகள் ஆய்வறிக்கை கொடுத்த பிறகுதான் உண்மை தெரியவரும்" என்று கூறினார்.

நெல்லை: ஸ்கூட்டி மீது பாய்ந்த மாடு; கல்லூரி மாணவி படுகாயம்... சாலையில் தொடரும் சம்பவங்கள்..!

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சர்வசாதாரணமாக மாடுகள் சுற்றித் திரிகின்றன. நகரின் மையப்பகுதிகளில் கூட மாடுகள், ஆடுகள் போன்றவை நடமாடுகின்றன. குறிப்பாக நெல்லை-தூத்துக்குடி மற்றும் நெல்லை-கன்னியாகுமரி நான்க... மேலும் பார்க்க

பரமக்குடி: இருசக்கர வாகனத்தில் ராங் ரூட்டில் வந்த இளைஞர்கள்; கார் மோதி பலியான சோகம்

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிபவர் வினோதினி பிரியா. இவர் கோவையில் உள்ள தனது குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு, சனிக்கிழமை இரவு மதுரை - ராமேஸ்வரம் நான்குவழிச் சா... மேலும் பார்க்க

இந்தியாவில் தொடரும் ரயில் விபத்துகள் - உண்மையான குற்றவாளி யார் தெரியுமா?

இந்தியாவில் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக ரயில் விபத்துகள் மாறிவிட்டன. சமீபத்தில் சென்னை அருகே கவரப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்துக்குப் பிறகு, அஸ்ஸாமிலும், மும்பையிலும் ரயில்கள் தடம்புரண்டிருக்கின்றன... மேலும் பார்க்க