செய்திகள் :

சென்னை தலைமைச் செயலகக் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு!

post image

சென்னை தலைமைச் செயலகத்தில் தரையில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பல்வேறு துறை அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் மொத்தம் 10 தளங்கள் உள்ள நிலையில் முதல் தளத்தில் தரையில் உள்ள டைல்ஸில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சத்தில் கட்டடத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் வெளியேறியுள்ளனர்.

இதன்பின்னர் தகவலறிந்த காவல் துறை சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இது காற்று வெடிப்பினால் ஏற்பட்ட சாதாரண விரிசல்தான், பயப்படத் தேவையில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். பொதுப்பணித் துறை இதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

எனவே, ஊழியர்கள் தங்கள் பணியைத் தொடருமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். எனினும் அச்சம் காரணமாக ஊழியர்கள் இன்னும் பணிக்குத் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் டாப் 10 தொடர்கள்!

தமிழ்நாட்டில் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் தொடர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை தொடர்கள் பெற்ற டிஆர்பி புள்ளிகளின் அடிப்படையில் இவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.காலமாற்றத்துக்... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? புகார் அளிக்கலாம்! - அமைச்சர் பேட்டி

தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகை வருகிற வியாழக்கிழமை(அக். 31) கொண்டாடப்படவுள்ள ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சோதனை!

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு தொடா்பாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆா்.வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.அம... மேலும் பார்க்க

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 101.40 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் நீர்மட்டம் 1.40 அடி உயர்ந்துள்ளது.காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீா்ப்பி... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதன் க... மேலும் பார்க்க

தமிழ் இலக்கியத்துக்கு பெரும் பங்காற்றியவா் உமறுப்புலவா் -இபிஎஸ் புகழாரம்

தமிழக இலக்கியத்துக்கு பெரும் பங்காற்றிய உமறுப்புலவரைப் போற்றி வணங்குகிறேன் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: இறைத... மேலும் பார்க்க