செய்திகள் :

சென்னை: நள்ளிரவில் பைக் டாக்ஸியில் பயணித்த வடமாநில இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - டிரைவர் கைது

post image

வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கணவருடன் சென்னை, மதுரவாயலில் வசித்து வருகிறார். இவர், கடந்த 26.10.2025-ம் தேதி இரவு பைக் டாக்ஸி மூலம் பள்ளிக்காரணைக்கு சென்றிருக்கிறார்.

பின்னர், அதே பைக்கில் வீடு திரும்பி வந்தபோது, பைக்கை ஓட்டிய இளைஞர், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றிருக்கிறார். அதைக் கவனித்த வடமாநில இளம்பெண், எங்கே செல்கிறீர்கள் என்று பைக்கை ஒட்டியவரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பைக் டாக்ஸி
பைக் டாக்ஸி

ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளாத பைக்கை ஒட்டியவர், இருட்டான பகுதியில் பைக்கை நிறுத்தியிருக்கிறார். பின்னர் பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணை கீழே இறங்கும்படி கூறியிருக்கிறார்.

என்னவென்று தெரியாமல் திகைத்த அந்த இளம்பெண்ணின் கழுத்தைப் பிடித்து நெரித்திருக்கிறார் பைக்கை ஓட்டிய இளைஞர். அதனால் சத்தம் போட முடியாமலும் அந்த இளைஞரின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாமலும் இளம்பெண் தவித்திருக்கிறார்.

இந்தச் சூழலில் அந்த இளம்பெண்ணை மிரட்டிய இளைஞர் அவருக்கு சொல்ல முடியாத பாலியல் தொல்லைகளைக் கொடுத்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், அந்த இளைஞருடன் போராடியிருக்கிறார்.

அதன்பிறகு இளம்பெண்ணை அங்கேயே தவிக்க விட்டு விட்டு பைக்கை எடுத்துக் கொண்டு அந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் தனக்கு நடந்த கொடுமைகளை தன்னுடைய கணவருக்கு செல்போன் மூலம் இளம்பெண் தெரிவித்தார்.

பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைதான சிவகுமார்
பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைதான சிவகுமார்

அதன்பிறகு கணவரின் உதவியோடு வீட்டுக்கு வந்த இளம்பெண், வாகனகரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து பைக்கை ஓட்டிய இளைஞரைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் இளைஞர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது உறுதியானது. இளைஞரிடம் விசாரணை நடத்தியதில் அவரின் பெயர் சிவகுமார் (22) என்றும் தேனிமாவட்டம், ஓடைப்பட்டி தாலுக்காவைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. விசாரணைக்குப்பிறகு சிவகுமாரை கைது செய்த போலீஸார், அவரின் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

டெல்லி கார் வெடிப்பு: `Hyundai i20 கார், CCTV கேமராக்கள் ஆய்வு' - அமித் ஷா பேட்டி

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று (நவ 10) மாலை 6.50 ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: போலீஸ் கமிஷனருடன் அமித் ஷா பேச்சு; கார் வெடிப்பு குறித்து கெஜ்ரிவால் கவலை!

திங்கட்கிழமை (நவ. 10) மாலையில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அருகாமையில் இருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.மெட்ரோ கேட் 1 அருகே கார... மேலும் பார்க்க

டெல்லி: செங்கோட்டை அருகே கார் வெடிப்பு; 8 பேர் பலி; நெஞ்சை உலுக்கும் வீடியோ - விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தால் அருகே இருந... மேலும் பார்க்க

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; பெண் டாக்டர் காரில் ஏ.கே.47 ரக துப்பாக்கி பறிமுதல் - பகீர் பின்னணி!

ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் ரெய்டு நடத்தினர். இதில் படித்து உயர் பதவியில் ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: அனைத்து வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த தவெக; 2 -ம் நாளாக சிபிஐ விசாரணை

ஆஜரான 12 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்கடந்த செப்டம்பர் 27-ம் தேதி த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பா... மேலும் பார்க்க

டெல்லி: `பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்கள் சப்ளை; தாக்குதல் நடத்த சதி' - தீவிரவாதிகள் கைது

டெல்லி அருகே ஜம்மு காஷ்மீர் போலீஸார் ரெய்டு நடத்தி 350 கிலோ வெடிமருந்துகளையும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் 20 ரிமோட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஹரியானாவில் உள்ள பரிதாபாத்தில் இதே போலீஸா... மேலும் பார்க்க