சென்னை, புறநகரில் சில மணிநேரங்கள் மழை பெய்யும்!
சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பகல் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால் தமிழகத்துக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திரம் நோக்கி நகர்வதால் தமிழகத்துக்கான எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றும், இன்றும் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மிதமான மழையே பெய்தது.
இதையும் படிக்க : புயல் சின்னம் ஆந்திரத்துக்குச் செல்கிறது: தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை வாபஸ்
இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திரத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதால் அடுத்த சில மணிநேரங்கள் தமிழக கடற்கரையோரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இந்த புயல் சின்னத்தால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு கிடைக்கும் கடைசி மழை இது என்றும், சாதாரண மழையே பெய்யும் எனவும் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சென்னை கடற்கரைக்கு இணையாக வடக்கு நோக்கி மேகக் கூட்டங்கள் நகரும் என்றும் தெரிவித்துள்ளார்.