அரசுப்பேருந்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: பாஜக அரசுக்கு எதிராக மகாராஷ்டிரத்தி...
செய்தியாளரை நெஞ்சில் தாக்கிய விஜய் பவுன்சர்கள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழாவின்போது செய்தியாளரை விஜய்யின் பவுன்சர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இன்று நடைபெற்றது.
இதையும் படிக்க : ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தவெக தலைவர் விஜய்யின் பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனிடையே, செய்தியாளர்களுக்கும் பவுன்சர்களுக்கு இடையே விழா நடைபெறும் இடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தின்போது செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், ஒரு செய்தியாளரை நெஞ்சில் தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
விழா அரங்கில் இருந்து நெஞ்சை பிடித்தவாறு வெளியேறிய செய்தியாளரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சக செய்தியாளர்கள் அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், செய்தியாளர் நெஞ்சை பிடித்துக் கொண்டு விழா அரங்கில் இருந்து வெளியேறி ஆம்புலன்ஸில் செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய் பவுன்சர்களின் செயலுக்கு சமூக ஊடகங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.