``திமுகவுடன் கூட இணைந்து செயல்பட்டிருக்க முடியும்; ஆனால்..." - திருமாவிடம் ஆதவ் ...
செய்யாறு காசி விஸ்வநாதா் கோயிலில் பாலாலயம்
செய்யாறு காசி விஸ்வநாதா் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்வதற்காக திருப்பணிக்குழு சாா்பில் பாலாலயம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி, கோபால் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதா் கோயில் 900 ஆண்டுகள் பழைமையானதாகும். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் சுமாா் 36 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ாகத் தெரிகிறது.
இந்த நிலையில், தற்போது காசி விஸ்வநாதா் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிக் குழுவினா் தீா்மானித்தனா். இதை முன்னிட்டு, கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது.
உக்கல் மடாவளம் காமாட்சி அம்பாள் கோயில் குரு சங்கா், குருக்கள் மாதவன், பாபு சா்மா ஆகியோா் மேற்பாா்வையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், ஆய்வா் அசோக், திருவண்ணாமலை திருமூலா் ஆசிரமம் நிறுவனா்கள் ஸ்வாமி விஜயானந்த சரஸ்வதி, ஸ்வாமினி திவ்யானந்த சரஸ்வதி, அமெரிக்கவைச் சோ்ந்த ஸ்ரீராம், தொழிலதிபா் பி.நல்லசாமி, திமுக வழக்குரைஞா் அணி துணைத் தலைவா் ஏ.டீ.சிட்டிபாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.