செய்திகள் :

'செல்வராகவன் சாரின் புதுப்பேட்டை படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன்'- மலையாள நடிகர் ஷேன் நிகாம்

post image

மலையாள இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் 'பல்டி'.

வளர்ந்துவரும் நட்சத்திரமான ஷேன் நிகாமின் 25வது திரைப்படம் இது. தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் சாந்தனு, செல்வராகவன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவின் இளம் சென்சேஷனாக வலம்வரும் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

'பல்டி'
'பல்டி'

இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (செப்.18) சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ஷேன் நிகாம், " 'பல்டி' ஒரு ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா படம். 4 பசங்க, அவர்களுடைய கபடி குழு. இதில் வில்லன் வந்தால் எந்தளவிற்கு போராட்டமாக இருக்கும் என்பதே படத்தின் கதை.

பினு சேட்டா, சந்தோஷ் சேட்டாவிற்கு நன்றி. செல்வராகவன் சாருக்கு நான் மிகப் பெரிய ரசிகன். அவருடைய புதுப்பேட்டை படத்தை பலமுறைப் பார்த்திருக்கிறேன்.

புதுப்பேட்டை - செல்வராகவன், தனுஷ், சோனியா அகர்வால்
புதுப்பேட்டை - செல்வராகவன், தனுஷ், சோனியா அகர்வால்

சாந்தனு மாதிரி ஆர்வமுடன் நடிப்பவர்களை பார்ப்பது அரிது. சாய் நன்றாக இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி.

ப்ரீதிக்கு நன்றி மற்றும் இப்படக் குழு அனைவருக்கும் நன்றி. இப்படம் பிடித்திருந்தால் ஆதரவு கொடுங்கள்” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

ரோபோ சங்கர்: `` `கமல்சார்ட்ட பேசிட்டேன் எல்லாம் ஓகே'ன்னு சொன்னாரு..."- மனம் திறக்கும் ரவி மரியா!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவு திரையுலகை வருத்தமுறச் செய்திருக்கிறது. இத்தனை இளம் வயதில் அவரின் இழப்பு அத்தனை பேரையும் துன்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.இயக்குநர் எழிலின் `வேலைன்னு வந்துட்டா வெள்ளை... மேலும் பார்க்க

Anupama: ``இறப்பதற்கு முன் நண்பர் அனுப்பிய அந்த மெசேஜ்; என் மனதின் ஆறாத காயம்" - அனுபமா பரமேஸ்வரன்

மலையாள திரையுலகில் பல திரைப்படங்களில் பிஸியாகியிருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரமுடன் 'பைசன்' படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு திரை... மேலும் பார்க்க

Kiss: `வார்த்தைக்கு வாயில்லை' - வாழ்த்து தெரிவித்த இயக்குநர் நெல்சனுக்கு நடிகர் கவின் நன்றி!

சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.`லிஃப்ட்' படத்தில் தொட... மேலும் பார்க்க

"அடுத்த படம் தனுஷ் சார்கூட தான்; கதை சொல்லும்போது..."- 'லப்பர் பந்து' இயக்குநர் தமிழரசனின் அப்டேட்

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'லப்பர் பந்து' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது.இப்படத்தில்... மேலும் பார்க்க

Balti: 'செல்வராகவன் சாருக்கு ரசிகனாக இல்லாமல் யாரும் இருக்க முடியாது'- நடிகர் சாந்தனு

மலையாள இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் 'பல்டி'. வளர்ந்துவரும் நட்சத்திரமான ஷேன் நிகாமின் 25வது திரைப்படம் இது. தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகி இ... மேலும் பார்க்க