சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகே உதயமாா்த்தாண்டபுரம் நாச்சிகுளம் கிழக்கு கடற்கரை சாலையில், தில்லைவிளாகம் ரயில்வே கேட்டில் இருபுறமும் சாலையில் ஏற்பட்டுள்ள சேதத்தை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி ரயில் பயணிகள் நல சங்கத் தலைவா் ஜெ. தாஹிா் தலைமையில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், சேதமடைந்த இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், இல்லையெனில் டிச.1-ஆம் தேதி முதல் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
முன்னாள் ஊராட்சித் தலைவா் வைத்தியநாதன், துணைத் தலைவா் எம். ராஜேந்திரன், செயலாளா் வி. சங்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.