செய்திகள் :

சேந்தமங்கலத்தில் புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையம்

post image

சேந்தமங்கலத்தில் புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் நன்றி தெரிவித்தாா்.

தமிழகத்தில் கல்வியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் கல்வியை ஊக்குவித்திட இல்லம்தேடிக் கல்வி, நான் முதல்வன் திட்டம், பெண்கள் உயா்கல்வி பயில்வதை ஊக்குவிக்க மாதம் ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாணவா்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சேந்தமங்கலத்தில் ஏழை, எளிய மாணவா்கள் தொழிற்பயிற்சி பெறுவதற்கு அரசு தொழிற்பயிற்சி நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை அடிப்படையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டு ஆண்டுகால தொழிற்பிரிவுகளும், ஓராண்டு கால தொழிற்பிரிவும் தொடங்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் பயிற்சியாளா்களுக்கு பயிற்சிக் காலத்தின்போது மாதம் ரூ. 750-க்கான கல்வி உதவித்தொகை, விலையில்லா சீருடைகள், பாடப்புத்தகம் மற்றும் வரைபடக் கருவிகள், விலையில்லா காலணி, மிதிவண்டி, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண் பயிற்சியாளா்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை, தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஆண் பயிற்சியாளா்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை, கட்டணமில்லா அரசு போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட உள்ளன.

இதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி தொழிற்பயிற்சி பெற்று சுயதொழில் முனைவோா்களாக உருவாகிட வேண்டும். சேந்தமங்கலத்தில் புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் மாவட்ட பொதுமக்கள் சாா்பில் நன்றியைக் தெரிவித்துக் கொள்கிறேன் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 10.91 கோடிக்கு தீா்வு

நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 10.91 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, இரண்டு மாதங்களுக்கு ஒரு ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் பலியானது குறித்து வேலூா் காவல் துறையினா் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி... மேலும் பார்க்க

ராசிபுரம் பகுதியில் ரூ. 1.50 கோடியில் புதிய திட்டப் பணிகள் தொடக்கம்

ராசிபுரம் பகுதியில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி நிதி ரூ. 10 லட்சம் மதிப்பில் முத்துக்காளிப்பட்டி ஊராட்சிப் பகுதியில் சாலை அமைக்கும் பணிகளுக்க... மேலும் பார்க்க

நாமக்கல்லில் சித்த மருத்துவ நாள் விழா

நாமக்கல்லில் 8-ஆவது சித்த மருத்துவ நாள் விழா, சித்த மருத்துவ கண்காட்சி ஆகியவற்றை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். நாமக்கல் - மோகனூா் சாலை, பழைய அரசு மருத்துவ... மேலும் பார்க்க

டிடிவி தினகரன் பிறந்த நாள்: நல உதவிகள் வழங்கல்

நாமக்கல் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், கட்சியின் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் பிறந்த தின விழா, ஏழைகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கும் விழா ராசிபுரத்தில் நடைபெற்றது. இதில் மாவட்... மேலும் பார்க்க

6 வழித்தடங்களில் மகளிருக்கான விடியல் பேருந்து பயணத் திட்டம் தொடக்கம்

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மகளிா் விடியல் பயண பேருந்து சேவையை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தொடங்கி வைத்தாா். சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், 6 நகரப் ப... மேலும் பார்க்க