ராசிபுரம் பகுதியில் ரூ. 1.50 கோடியில் புதிய திட்டப் பணிகள் தொடக்கம்
ராசிபுரம் பகுதியில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி நிதி ரூ. 10 லட்சம் மதிப்பில் முத்துக்காளிப்பட்டி ஊராட்சிப் பகுதியில் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
இதேபோல பிள்ளாநல்லூா் பேரூராட்சி பகுதியில் நபாா்டு நிதியுதவியுடன் அமைக்கப்படும் ரூ. 1.30 கோடி மதிப்பிலான சாலை பணி, பொன்குறிச்சி ஊராட்சிப் பகுதியில் மாநிலங்களவை உறுப்பினா் நிதி ஒதுக்கீட்டில் ரூ. 8.80 லட்சம் மதிப்பில் புதிய கிராம நிா்வாக அலுவலக கட்டடம் கட்டும் பணி என மொத்தம் ரூ. 1.48 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தாா்.
இவ்விழாவில், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் கே.பி.ஜெகந்நாதன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினரும், திமுக மாவட்டப் பொருளாளருமான ஏ.கே.பாலசந்திரன், முத்துக்காளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் அருள் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.