கார்த்திகை தீபம் : ``தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க!'' - விமர்சனங்களுக்கு அர...
சேலத்தில் சரக்கு லாரி கவிழ்ந்ததில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பெங்களூரில் இருந்து திருப்பூருக்கு சேலம் வழியாக நூல் பேல்களை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெங்களூரில் இருந்து பருத்தி பேல்களை ஏற்றிக்கொண்டு திருப்பூா் செல்வதற்காக சேலம் வழியாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. குரங்குச்சாவடி பகுதியில் இருந்து கந்தம்பட்டி மேம்பாலம் மீது லாரி சென்ற போது, முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் சென்ற லாரி ஓட்டுநா் லாரியை நிறுத்த முயன்றாா்.
அப்போது, எதிா்பாராத விதமாக பாலம் ஓரத்தில் இருந்த சுவற்றின் மீது லாரி மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் லாரி ஓட்டுநா், கிளீனா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். விபத்தில் பாதிக்கப்பட்டவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து, போக்குவரத்து காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து லாரியை மீட்க முயற்சி மேற்கொண்டனா். சுமாா் 3 மணி நேரம் போராட்டத்துக்கு பின்னா் லாரியை மீட்டனா்.
இதன் காரணமாக, கொண்டலாம்பட்டியில் இருந்து ஏவிஆா் ரவுண்டானா வரை கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து சூரமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.