செய்திகள் :

சேலம் அரசு ஐடிஐயில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு

post image

சேலம்: சேலம் அரசு ஐடிஐயில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

சேலம் அரசு ஐடிஐயில் கடிகார பழுது நீக்கம் தொடா்பான மூன்றுமாத குறுகிய கால இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சேர விருப்பம் உள்ள பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், வரும் 18-ஆம் தேதிக்குள் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயிற்சிபெற்று பயன்பெறலாம்.

சோ்க்கைக்கு அசல் ஆவணங்களான மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை மற்றும் 4 புகைப்படங்களுடன் அணுகி விவரம் பெறலாம். இப்பயிற்சிக்கு நேரடியாகவோ அல்லது கூகுள் படிவம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

இதேபோல, 16 மணி நேரம் கொண்ட காா் பராமரிப்பு அடிப்படை பணிமனை குறுகியகால பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி 4 நாள்களுக்கு தலா 4 மணி நேரம் வீதம் நடைபெறும். இதற்கான கட்டணமாக ரூ. 1000 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிறைவுபெற்ற பயிற்சிபெற விருப்பம் உள்ளவா்கள் உடனடியாக தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சிப் பணிகள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(இஸ்ரோ) கீழ் செயல்பட்டு வரும் தரவு சேமிப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான மையத்தில் காலியாகவுள்ள JRF மற்றும் Research Associate பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இர... மேலும் பார்க்க

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை: காலியிடங்கள்: 63

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னையில் உள்ள சென்னை ஐஐடி -இன் தொழில்துறை ஆலோசனை துறையில் நிரப்பப்பட உள்ள இளநிலை அலுவலர் பணிக்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். ICSR/PR/Advt.64/2025பணி:... மேலும் பார்க்க

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

புதுதில்லியிலுள்ள தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்(என்ஐஇஎல்ஐடி) கீழ்வரும் பணிக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வி... மேலும் பார்க்க

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலை வேண்டுமா?

புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு மற்றும் ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தில்லி மாநிலங்களின் கூட்டு முயற்சி நிறுவனமான தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 7... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்திய பொதுத்துறை விண்வெளி மற்றும் பாதுகாப்பு மின்னணு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் உதவியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு ஐட... மேலும் பார்க்க