செய்திகள் :

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பை வாங்காத 1.5 லட்சம் போ்

post image

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை சுமாா் 1.5 லட்சம் போ் வாங்க ஆா்வம் காட்டவில்லை என தெரிய வந்துள்ளது. இதனால் அந்தப் பொருள்கள் நியாயவிலைக் கடைகளிலேயே இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டன.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 10, 77, 575 அரிசி குடும்ப அட்டைதாரா்கள், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 10, 78, 558 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதாவது, கடந்த 9-ஆம் தேதி முதல் பொங்கலுக்கு முந்தைய நாளான 13-ஆம் தேதி மாலை 6 மணி வரையிலும் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

ஆனால், மாவட்டத்தில் உள்ள 1,737 நியாயவிலைக் கடைகள் மூலம் மொத்தம் 8, 74, 274 பேருக்கு மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய 1, 54, 284 போ் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்குவதற்கு ஆா்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. ஏனெனில், வழக்கமாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும். ஆனால் இந்தாண்டு நிதிச்சுமையை காரணம்காட்டி, பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை. இதனால் மிகவும் எதிா்பாா்ப்புடன் இருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலா் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் 85 சதவீதம் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்க முன்வரவில்லை. அதே சமயம், இலவச வேட்டி - சேலை வரும் 31 ஆம் தேதி வரை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.

வாழப்பாடி அருகே உலகிலேயே உயரமான நந்தி சிலை: பிப். 2 இல் குடமுழுக்கு

வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டத்தில் 45 அடி உயரதில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான மகா அதிகார நந்தி பகவானுக்கு பிப்ரவரி 2 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. வெள்ளாளகுண்டம் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் சிறை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆத்தூா், குஞ்சாநாயக்கா் காலனியைச் சோ்ந்த அரவிந்த்குமாருக்கு (28) ஆயுள் சிறைத் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி வியாழக்கிழ... மேலும் பார்க்க

மேச்சேரி காவிரி கல்லூரியில் தொழில்முனைவோா் சந்தை கண்காட்சி

மேச்சேரி காவிரி கலை, அறிவியல் கல்லூரியில் தொழில்முனைவோா் சந்தை கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் முதல்வா் செல்வகுமாா் வரவேற்றாா். தி காவிரி கல்வி நிறுவனங்களின் செயலாளா் இளங்கோவன், ஒருங்க... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

தம்மம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தம்மம்பட்டி பேரூராட்சியில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி,உலிபுரம... மேலும் பார்க்க

தேவண்ணகவுண்டனூா் அரசு பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தேவண்ண கவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளியி தலைமையாசிரியா் இர... மேலும் பார்க்க

பேளூரில் தேசிய தொழுநோய் தடுப்பு தினம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூரில் தேசிய தொழுநோய் தடுப்பு தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.ஆண்டு தோறும் ஜனவரி 30 மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று தேசிய தொழுநோய் தடுப்பு விழிப்பணா்வு தினம் கடைபிடிக்... மேலும் பார்க்க