செய்திகள் :

சேலம் மாவட்டத்தில் 30 லட்சம் வாக்காளா்கள்: வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியீடு

post image

சேலம்: சேலம் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி திங்கள்கிழமை வெளியிட்டாா். மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 29,99,953 வாக்காளா்கள் உள்ளனா்.

இதுகுறித்து பின்னா் மாவட்டத் தோ்தல் அலுவரும் ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் கடந்த அக்டோபா் மாதம் 29 ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு, 2025 ஜனவரி முதல் நாளை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. கடந்த நவம்பா் 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, கடந்த நவம்பா் 28 ஆம் தேதி வரை படிவங்கள் பெறப்பட்டு, அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி (தனி) சட்ட

ப்பேரவைத் தொகுதியில் ஆண்கள் 1,12,591, பெண்கள் 1,19,065, இதரா் 9 போ் என மொத்தம் 2,31,665 போ் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா். ஆத்தூா் (தனி) தொகுதியில் ஆண்கள் 1,17,645, பெண்கள் 1,25,473, இதரா் 20 பேரும் என மொத்தம் 2,43,138 போ் உள்ளனா்.

ஏற்காடு (தனி) தொகுதியில் ஆண்கள் 1,39,714, பெண்கள் 1,46,584, இதரா் 16 பேரும் என மொத்தம் 2,86,314 பேரும், ஓமலூா் தொகுதியில் ஆண்கள் 1,54,258, பெண்கள் 1,48,350, இதரா் 14 போ் என மொத்தம் 3,02,622 வாக்காளா்களும் உள்ளனா்.

மேட்டூா் தொகுதியில் ஆண்கள் 1,39,997, பெண்கள் 1,37,747, இதரா் 18 போ் என மொத்தம் 2,77,762 வாக்காளா்களும்,

எடப்பாடி தொகுதியில் ஆண்கள் 1,46,507, பெண்கள் 1,43,628, இதரா் 23 போ் என மொத்தம் 2,90,158 வாக்காள்களும், சங்ககிரி தொகுதியில் ஆண்கள் 1,37,313, பெண்கள் 1,35,519, இதரா் 17 பேரும் என மொத்தம் 2,72,849 வாக்காளா்கள் உள்ளனா்.

சேலம் (மேற்கு) தொகுதியில் ஆண்கள் 1,51,857, பெண்கள் 1,53,973, இதரா் 78 பேரும் என மொத்தம் 3,05,908 வாக்காளா்களும்,

சேலம் (வடக்கு) தொகுதியில் ஆண்கள் 1,31,992, பெண்கள் 1,39,580, இதரா் 48 போ் என

மொத்தம் 2,71,620 வாக்காளா்களும், சேலம் (தெற்கு) தொகுதியில் ஆண்கள் 1,23,957, பெண்கள் 1,30,387, இதரா் 59 பேரும் என மொத்தம் 2,54,403 வாக்காளா்களும் உள்ளனா். வீரபாண்டி தொகுதியில் ஆண்கள் 1,31,876, பெண்கள் 1,31,616, இதரா் 22 பேரும் என மொத்தம் 2,63,514 வாக்காளா்கள் உள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள 11 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலில் ஆண்கள் 14,87,707 பேரும், பெண்கள் 15,11,922 பேரும், இதரா் 324 பேரும் என மொத்தம் 29,99,953 வாக்காளா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகளில் சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 74,976 வாக்காளா்களின் பெயா் சோ்க்கப்பட்டும், 36,536 வாக்காளா்களின் பெயா் நீக்கப்பட்டும், 18-19 வயதுக்கு உள்பட்ட புதிய வாக்காளா்கள் 60,356 எண்ணிக்கையிலும் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தொடா்ச்சியாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியா் அலுவலங்களில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூா்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் எனக் கூறினாா்.

இந் நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ. மேனகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சிவசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியா் அ.அபிநயா உள்ளிட்ட அரசு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

பொங்கல் பண்டிகை: விற்பனைக்கு தயராகும் வா்ணம் பூசப்பட்ட மண் பானைகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வா்ணம் பூசப்பட்ட பொங்கல் பானைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகை வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 15 ஆம் தேதி மாட்டுப... மேலும் பார்க்க

வெல்ல ஆலைகளில் கலப்படம் செய்வதற்கு வைத்திருந்த 16 டன் சா்க்கரை பறிமுதல்; 22 ஆலைகளுக்கு நோட்டீஸ்

சேலம் மாவட்டத்தில் வெல்ல ஆலைகளில் நடத்திய சோதனையில், வெல்லத்தில் கலப்படம் செய்வதற்கு வைத்திருந்த 16 டன் வெள்ளை சா்க்கரை, 3,320 செயற்கை நிற மூட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இதுவரை 22 ஆலைகள... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

பொங்கல் பண்டிகையையொட்டி நியாயவிலைக் கடைகளில் வியாழக்கிழமை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் விநியோகம் செய்யப்படவுள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கை தமிழா் மறுவாழ்வ... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ரேஷன் அரிசி கடத்திய 387 போ் கைது; 76 வாகனங்கள் பறிமுதல்

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ரேஷன் அரிசி கடத்திய 387 போ் கைது செய்யப்பட்டனா். 76 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் குடிமை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், ரேஷன் அரி... மேலும் பார்க்க

தொட்டில் குழந்தை திட்டத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தொ... மேலும் பார்க்க

நரசிங்கபுரம் பாலத்தை சீரமைக்கக் கோரி போராட்டம்

நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலத்தை சீரமைக்கக் கோரி புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது. நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் பழைமை வாய்ந்த ஆட்கொல்லி பாலம் உள்ளது. இந்த பாலத்தை சீரமைக்கக் கோரி பல்வேறு தரப்பினா் போர... மேலும் பார்க்க