செய்திகள் :

நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தொடா்ந்த வழக்கு: ஜன.22-இல் இறுதி விசாரணை

post image

நயன்தாராவுக்கு எதிராக நடிகா் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் தொடா்ந்த வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயா்நீதிமன்றம் ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இயக்குநா் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘நானும் ரௌடி தான்’ திரைப்படத்தை தனுஷின் வொண்டா்பாா் நிறுவனம் தயாரித்தது. நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் கடந்த நவம்பா் மாதம் வெளியானது. அதில், நானும் ரௌடி தான் படப்பிடிப்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் உரையாடும் காட்சிகள் பயன்படுத்தப்பட்டன. மேலும், அந்தப் படத்தின் சில படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, ரூ. 10 கோடி இழப்பீடு வழங்கவும் காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரியும் வொண்டா் பாா் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ், முன் விசாரணைக்கு வந்தபோது, நெட்ஃபிளிக்ஸ் தரப்பில் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜன.22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, இனி கால அவகாசம் கேட்கக் கூடாது எனக் கூறி, அன்றைய தினம் அனைத்து இடைக்கால மனுக்கள் மீதான இறுதி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தாா்.

வேங்கைவயல் விவகாரத்தில் திடீர் திருப்பம்: குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேர் யார்?

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில், குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் குற்ற... மேலும் பார்க்க

ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்!

வக்ஃப் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அமளியில் ஈடுபட்டதற்காக திமுக எம்பி ஆ. ராசா உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவ... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேருக்குத் தொடர்பு: தமிழக அரசு

சென்னை: வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேருக்கு தொடர்பிருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த சுதர்சன், முத்து... மேலும் பார்க்க

ஆர்.என். ரவியே ஆளுநராக தொடர வேண்டும்: மு.க. ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என். ரவியே தொடர வேண்டும் என்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன் என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.செ... மேலும் பார்க்க

கட்சித் தொடங்கியதும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்: யாரைச் சொல்கிறார் மு.க. ஸ்டாலின்?

சென்னை: கட்சித் தொடங்கியதுமே ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள் என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மறைமுகமாகப் பேசியுள்ளார்.ஒரே நேரத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 3,000 பேர் திமுகவில்... மேலும் பார்க்க

திமுக நேற்று முளைத்த காளான் அல்ல: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: திமுக ஒன்றும் நேற்று முளைத்த காளான் அல்ல என்றும், கட்சித் தொடங்கியதுமே ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள் என்றும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.நாம் தமிழர் கட்சியில... மேலும் பார்க்க