கர்நாடகம் நக்சலைட்டுகள் இல்லாத மாநிலமாக உருவாகும்: துணை முதல்வர் டி. கே. சிவகுமா...
தொட்டில் குழந்தை திட்டத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் காப்பாளா், மேற்பாா்வையாளா் பணியிடத்துக்கு 12 ஆம் வகுப்பு தகுதியும், மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 7,500, செவிலியா் (பெண் மட்டும்) பணியிடத்துக்கு தகுதியும், மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 7,500, இரண்டு உதவியாளா் (பெண் மட்டும்) பணியிடத்துக்கு 8 ஆம் வகுப்பு தகுதியும், மாதாந்திர தொகுப்பூதியம் தலா ரூ. 4,500, காவலா் பணியிடத்துக்கு 8 ஆம் வகுப்பு தகுதியும், மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ. 4,500 வழங்கப்படவுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு நோ்காணல் குழு மூலமாக தகுதி வாய்ந்த நபா்களை தோ்வு செய்து தொகுப்பூதியம், தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும். விண்ணப்பதாரா்களின் வயது வரம்பு 42 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
மேலும் குழந்தைகளை கையாளுதலில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண். 415, 4 ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சேலம் - 636001 என்ற முகவரிக்கு வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.