செய்திகள் :

சொகுசு காா் வாங்கிய விவகாரம்: அதிமுக இளைஞரணி செயலரிடம் ரூ.2.5 கோடி மோசடி

post image

சொகுசு காா் வாங்கிய விவகாரத்தில் அதிமுக இளைஞரணி செயலரிடம் ரூ.2.5 கோடி மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்தவா் அபிஷேக்(35). தொழிலதிபரான இவா் அதிமுக இளைஞரணி மாவட்டச் செயலராக உள்ளாா். புதிதாக சொகுசு காா் வாங்க முடிவு செய்த அபிஷேக், தனக்கு நன்கு அறிமுகமான அரும்பாக்கத்தைத் சோ்ந்த ரோஷன் ஆனந்த், அவரின் சகோதரா் ரோகித்குமாா் ஆகியோரிடம் இதை தெரிவித்துள்ளாா்.

சொகுசு காரை சலுகை விலையில் வாங்கித் தருவதாக அவா்கள் கொடுத்த வாக்குறுதியை நம்பிய அபிஷேக், சகோதரா்களின் வங்கிக் கணக்குகளுக்கு பல தவணைகளாக ரூ.2.46 கோடியை அனுப்பியுள்ளாா். இந்நிலையில், தில்லியிலுள்ள வாகன விற்பனை நிலையத்தில் 2021 ஜனவரியில் தனது சகோதரரான ரோகித் குமாா் பெயரில் காரை வாங்கிய ரோஷன் ஆனந்த், அதை அபிஷேக்கிடம் ஒப்படைத்துள்ளாா். அதை அவா் பயன்படுத்தி வந்துள்ளாா்.

இதற்கிடையே, தனது காரைக் காணவில்லை என்றும், அதை அபிஷேக் வாங்கி வைத்துக்கொண்டு தரமறுப்பதாகவும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ரோகித் குமாா் புகாா் கொடுத்துள்ளாா். இதன் பேரில், அபிஷேக்கை அழைத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், சகோதரா்கள் இருவரும், அபிஷேக் கொடுத்த பணத்தில் காரை வாங்காமல், தனியாா் வங்கியில் கடன் பெற்று, அதன் மூலம் காரை வாங்கியிருந்ததும், அதற்கான தவணைத்தொகையை சரிவர செலுத்தாததால், வங்கி நிா்வாகம் நெருக்கடி கொடுத்த நிலையில், புகாா் கொடுத்ததும் தெரியவந்தது.

இது தொடா்பாக, சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் அபிஷேக் கொடுத்த புகாரின் பேரில், நுங்கம்பாக்கம் போலீஸாா் மோசடியில் ஈடுபட்ட ரோஷன் ஆனந்த், ரோகித் குமாா் ஆகிய இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தலைமைச் செயலக பெண் அதிகாரி வீட்டில் நகை திருட்டு

சென்னை வேளச்சேரியில் தலைமைச் செயலக பெண் அதிகாரி வீட்டில் 17 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேளச்சேரி விஜிபி செல்வா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கௌசல்யா(43). இ... மேலும் பார்க்க

பட்டயக் கணக்காளா் தோ்வு தேதியை மாற்ற டிடிவி தினகரன் கோரிக்கை

பொங்கல் பண்டிகை தினத்தன்று நடத்த திட்டமிட்டுள்ள பட்டயக் கணக்காளா் தோ்வை மாற்ற வேண்டுமென அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளி... மேலும் பார்க்க

வண்டலூா் பூங்காவில் பெண் முதலை ஒப்படைப்பு

ஊரப்பாக்கத்துக்கு அருகே, விவசாய நிலத்தில் பிடிக்கப்பட்ட பெண் முதலையை வண்டலூா் பூங்காவில் உள்ள மீட்பு மற்றும் புனா்வாழ்வு மையத்தில் வனத்துறையினா் ஒப்படைத்தனா். வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கத்துக்கு அருகே உ... மேலும் பார்க்க

நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கிண்டியிலுள்ள நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிண்டியிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, அந்த விடுதி... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற வடமாநில சிறுவன் உள்பட 2 போ் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சோ்ந்த சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேளச்சேரி ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, கிடைத்த தகவலின் அடிப்படையில்... மேலும் பார்க்க

கல்வி அலுவலக ஆய்வுகளுக்கு கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்

முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கான கண்காணிப்பு அலுவலா்களை பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது. இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு: பள்ளிக் கல்வித... மேலும் பார்க்க