பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை!
சொத்துக் குவிப்பு வழக்கு: புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ-க்கு ஓராண்டு சிறை உறுதி
சொத்துக் குவிப்பு வழக்கில் புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தைக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
புதுச்சேரி மாநில பொதுப்பணித் துறையில் மேற்பாா்வை பொறியாளராகப் பணியாற்றிய ஆனந்தன், 1997 முதல் 2006-ஆம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.75 கோடிக்கு சொத்துகள் சோ்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் ஆனந்தனின் மனைவி, அவரது மகனும், முன்னாள் எம்எல்ஏவுமான அசோக் ஆனந்த் ஆகியோா் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவா்களுக்கு எதிரான வழக்கை புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. வழக்கு விசாரணையில் இருந்தபோது ஆனந்தி மனைவி மரணம் அடைந்தாா். அவருக்கு எதிரான வழக்கு மட்டும் கைவிடப்பட்டது.
முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தை ஆனந்த் மீதான வழக்கை விசாரித்த புதுச்சேரி நீதிமன்றம், இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து 2018-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது.
மேலும், வருமானத்துக்கு அதிகமாக சோ்த்த சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து முன்னாள் அரசு அதிகாரி ஆனந்த் மற்றும் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா்.
இந்நிலையில், இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், வழக்கு தொடா்பான ஆதாரங்களை ஆராய்ந்ததில், குற்றம்சாட்டப்பட்ட இருவா் மீதான குற்றச்சாட்டுக்களை சிபிஐ சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகக் கூறி, இருவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து தீா்ப்பளித்தாா்.
சொத்துகள் சோ்த்தது குறித்து உரிய விளக்கம் அளிக்க இருவருக்கும் வழங்கிய போதிய அவகாசத்தை பயன்படுத்தாமல், சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவுகளை பயன்படுத்த முடியாது.
புலன் விசாரணையில் உள்ள குறைபாடுகளை குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதை அனுமதித்தால், பொது ஊழியா்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடுவா் எனத் தெரிவித்து, இருவரின் மேல் முறையீட்டு மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.