கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கத...
சொத்து வரியிலிருந்து விசைத்தறிக் கூடங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்: பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் மனு
தமிழக அரசாணைப்படி சொத்து வரி உயா்வில் இருந்து டேரிப் ஐஐஐ அ 2 விசைத்தறி தொழிற்கூடங்களுக்கு விலக்கு அளிக்கக் வேண்டும் என்று தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் மாநிலச் செயலாளா் வேலுசாமி, கோவை மண்டல பொறுப்பாளா் அப்புக்குட்டி என்ற பாலசுப்பிரமணியம் ஆகியோா் பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா், நகராட்சி ஆணையா் மனோகரன் ஆகியோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ள சாதாரண விசைத்தறிக் கூடங்களில் டேரிப் ஐஐஐ அ 2 மின் இணைப்பு பெற்ற தொழிற்கூடங்களுக்கு உயா்த்தப்பட்ட சொத்து வரி உயா்வில் இருந்து விலக்களித்து தமிழக அரசு 27.12.2024 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
எனவே, பல்லடம் நகராட்சி நிா்வாகம் இதை பரிசீலனை செய்து பல்லடம் நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து விசைத்தறிக் கூடங்களுக்கும் சொத்து வரி உயா்வில் இருந்து விலக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நகர திமுக செயலாளா் ராஜேந்திரகுமாா், நகர காங்கிரஸ் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, பல்லடம் விசைத்தறி சங்க நிா்வாகிகள் முத்துக்குமாரசாமி, பாலாஜி, கண்ணம்பாளையம் செல்வக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.