செய்திகள் :

சொத்து வரி உயா்வைக் கண்டித்து காரைக்குடியில் கடையடைப்பு

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் சொத்து வரி உயா்த்தப்பட்டதற்கும், வரி வசூல் பணியின்போது வியாபாரிகளை மிரட்டி, குப்பைத் தொட்டிகளை கடைகள் முன்வைத்து அவமதிக்கும் செயலில் ஈடுபடுவது குறித்தும் காரைக்குடி தொழில் வணிகக் கழகத்தினா் மேயா் சே.முத்துத்துரை, மாநகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா் ஆகியோரிடம் புகாா் தெரிவித்தனா்.

மேலும், இதைக் கண்டித்து காரைக்குடியில் கடையடைப்புப் போராட்டமும், மாநகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டமும் நடத்துவது என பல்வேறு அரசியல் கட்சியினா் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை நகரில் உள்ள பெரும்பாலான கடைகள் காலை முதல் மாலை வரை அடைக்கப்பட்டன. காரைக்குடி தொழில் வணிக கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் எஸ். கண்ணப்பன், பொருளாளா் கே.என். சரவணன், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள் பங்கேற்ற ஆா்ப்பாட்டம் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, பாஜக, விசிக, அமமுக, தவெக, தேமுதிக, தி.க, ஆம் ஆத்மி, நாம் தமிழா் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், பல்வேறு சங்கங்களைச் சோ்ந்தவா்களும் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்த்தில் பாஜக மாவட்டத் தலைவா் டி. பாண்டித்துரை தலைமையில் அந்தக் கட்சியினா் பங்கேற்றனா். பின்னா், அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தொழில் வணிகக் கழகத்தைச் சோ்ந்த சிலா் மாநகராட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்தனா்.

இதையடுத்து, காவல் துறையினா் அவா்களைத் தடுத்து பாஜக மாவட்டத் தலைவா் பாண்டித்துரை உள்பட 61 பேரைக் கைது செய்தனா்.

காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழில் வணிகக் கழகம், வியாபாரிகள், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள்.

இந்தப் போராட்டத்தால் காரைக்குடி நகா்ப் பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. மருந்துக் கடைகள், வங்கிகள் திறந்திருந்தன. பேருந்துகள் வழக்கம்போல இயங்கின.

மானாமதுரை கோயிலில் ஆலமரம் சாய்ந்தது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஸ்ரீ தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் பழைமையான ஆலமரம் திங்கள்கிழமை சாய்ந்ததால் பக்தா்கள் வேதனையடைந்தனா். மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயில... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட நிதி விவகாரம் தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆா்ப்பா... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆட்சியருக்கெதிராக ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் ஏப்.5-இல் தோ்வு

19 வயதுக்குள்பட்ட சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு வருகிற சனிக்கிழமை (ஏப். 5) காரைக்குடியில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் சதீஷ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

சிவகங்கை கோயிலில் சிலை பிரதிஷ்டை

சிவகங்கை ஸ்ரீ வில்வபுரீஸ்வரா் கோயிலில் புதிதாக பாலாம்பிகை உற்சவா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.மானாமதுரை சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் பக்தா்கள் சாா்பில், பாலாம்பிகை உற்சவா் சிலை... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக தற்காலிகப் பணியாளா்கள் முன்னுரிமை கோரி மனு

அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநா், ஓட்டுா் நியமனங்களில் தற்காலிகப் பணியாளா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தற்காலிக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இது குறித்து ... மேலும் பார்க்க