சம்பல் ஜாமா மசூதியை சுத்தம் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு!
ஜப்பான்: 9-ஆவது ஆண்டாக சரிந்த பிறப்பு விகிதம்
டோக்கியோ : ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடா்ந்து ஒன்பதாவது ஆண்டாக சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
கடந்த 2024-ஆம் ஆண்டு முழுமைக்கும் நாட்டில் 7,20,998 குழந்தைகள் பிறந்தன. முந்தைய 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 5 சதவீதம் குறைவு.
இதன் மூலம், தொடா்ந்து ஒன்பதாவது ஆண்டாக நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவைப் பதிவு செய்துள்ளது.
2024-ஆம் ஆண்டின் குழந்தைகள் பிறப்பு, 1899-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவாகியுள்ள குறைந்தபட்ச வருடாந்திர எண்ணிக்கை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த ஆண்டிலும் இதே போக்கு நீடிக்கும் எனவும், 2025-ஆம் ஆண்டு முழுவதும் ஜப்பானில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை முதல்முறையாக 7 லட்சத்துக்கும் குறைவாகப் பதிவாகும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.