Kadagam | Guru Peyarchi | கடகம் - 12 - ல் குரு தரும் பலன் என்ன? | குருப்பெயர்ச்ச...
ஜம்முவில் பாதிக்கப்பட்ட தமிழா்களுக்கு உதவ முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழா்களுக்கு உதவிட, தில்லியில் உள்ள மாநில அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
ஜம்மு காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது. இது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும். தமிழகத்திலிருந்து சென்றவா்களும் இந்தத் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கும் செய்தியை அறிந்து ஆழ்ந்த துயரம் அடைந்தேன். பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை ஜம்மு காஷ்மீா் மாநில அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ள தில்லியில் உள்ள உறைவிட ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.