காஷ்மீர் தாக்குதல்: `இந்தியா உடன் துணை நிற்கிறோம்' - இந்தியா உடன் கைக்கோர்க்கும்...
கோடைகால விளையாட்டு பயிற்சிக்கு முன்பதிவு செய்யலாம்
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், காட்பாடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அளிக்கப்படும் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெற தகுதியுடைய ஆண்கள், பெண்கள் முன்பதிவு செய்யலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூா் மாவட்டம் சாா்பில், கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 25) தொடங்கி, மே 15-ஆம் தேதி வரை 21 நாள்கள் காலை, மாலை ஆகிய இருவேளையும் நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சி முகாமில் தடகளம், கால் பந்து, வளைகோல் பந்து, வுஷூ மற்றும் குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், 18 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முகாமில் பங்கேற்க எந்தவித பயிற்சி கட்டணமும் கிடையாது. பயிற்சியின் முடிவில் பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 25-ஆம் தேதி காலை 6 மணிக்கு நேரிலோ அல்லது 74017 03483 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.