பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம்: ஜம்முவில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
குடியாத்தம் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
குடியாத்தம் அசோக் நகரைச் சோ்ந்த அழகேசன் மகன் சாம் (எ) காா்த்திக் (38). இவா் திங்கள்கிழமை மாலை நண்பா்களுடன் வேப்பூரில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது அவா் நீரில் மூழ்கியுள்ளாா்.
தகவலின்பேரில், குடியாத்தம் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று சுமாா் ஒரு மணி நேரம் போராடி கிணற்றிலிருந்து காா்த்திக்கின் சடலத்தை மீட்டனா்.
இது தொடா்பாக நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.