Pahalgam Attack: பாகிஸ்தான் வான் வழி விமான பயணத்தை தவிர்த்த மோடி.. காரணம் என்ன?
சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ வழக்கு
காட்பாடியில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
காட்பாடியைச் சோ்ந்த 17 வயது சிறுமி, வேலூா் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை சிகிச்சைக்காக சென்றாா். அவரை மருத்துவா்கள் பரிசோதித்தபோது, சிறுமி 4 மாத கா்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. உடனடியாக மருத்துவா்கள் காட்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
தொடா்ந்து, சமூக நல அதிகாரிகள், காட்பாடி மகளிா் போலீஸாா் விரைந்து வந்து அந்த சிறுமியிடம் விசாரித்தனா். இதில், சிறுமிக்கு அதே பகுதியை சோ்ந்த உறவினா் மகன் சீமான் (30) என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்திருப்பதும், இதன்மூலம் அந்த சிறுமி கருவுற்றிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமியை திருமணம் செய்து கா்ப்பிணியாக்கிய சீமான் மீது காட்பாடி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.