செய்திகள் :

பிரதமர் மோடி உயர்நிலைக் குழுவுடன் அவசர ஆலோசனை!

post image

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த கொடூர தாக்குதலில் 2 வெளிநாட்டவர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அரசுமுறை பயணமாக செளதி சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, பயணத்தை பாதியில் முடித்துவிட்டு இன்று காலை தில்லி திரும்பினார்.

இந்த நிலையில், பெஹல்காம் சம்பவம் குறித்து உயர்நிலைக் குழுவுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆலோசனையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஏற்கெனவே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு - காஷ்மீர் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : காஷ்மீர் தாக்குதல்: பயணத்தை பாதியில் முடித்துவிட்டு தில்லி திரும்பினார் மோடி!

பெஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளின் வரைப்படங்கள் வெளியீடு!

பெஹல்காமில் தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளின் வரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.ஜம்மு - காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கண... மேலும் பார்க்க

பிஸ்மில்லா, பிஸ்மில்லா... பெஹல்காமில் காயமுற்றோரை மீட்ட முஸ்லிம் இளைஞர்கள்!

பெஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களை பிஸ்மில்லா, பிஸ்மில்லா என்று கூறிக்கொண்டே முஸ்லிம் இளைஞர்களும் இந்தப் பகுதி மக்களும் காப்பாற்றியதாகத் தாக்குதலில் கணவனைப் பறிகொடுத்த ஒரு பெண் தெரிவித்துள்ளார்.மேல... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா நக... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: பலியானோர் உடலுக்கு அமித் ஷா அஞ்சலி!

ஜம்மு - காஷ்மீரின் பெஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பலியானோர் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் பார்க்க

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: திருமணமாகி 7 நாள்களேயான கடற்படை அதிகாரி பலி

கர்னால் (ஹரியாணா): ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், திருமணமாகி ஏழு நாள்களேயான ஹரியாணா மாநிலம் கர்னாலைச் சேர்ந்த 26 வயதான இந்திய கடற்படை அதிகாரி லெ... மேலும் பார்க்க

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு- காஷ்மீரின் பாரமுல்லாவின் உரி நாலாவில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 ... மேலும் பார்க்க