பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம்: ஜம்முவில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவு
குஜராத்: குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், கட்சு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11.26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 20 கி.மீட ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக பதிவானது.
காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொலை: பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்
இதையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலஅதிர்வுகள் உணரப்பட்டன. நிலஅதிா்வுகள் காரணமாக வீடுகள் மற்றும் கட்டடங்களை விட்டு பொதுமக்கள் அச்சத்தில் வெளியேறினா்.
இந்த நிலஅதிர்வால் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் மற்றும் பொருள் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.