Sachein: ``சச்சின் படத்தோட வாய்ப்பு எனக்கு லக்ல கிடைச்சது!'' - வைரல் ராஷ்மி பேட்...
ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி தலைமை வகித்தாா். இதில், நாமக்கல் மாவட்டத்தில் 300 கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா், தூய்மைக் காவலா், வட்டார ஒருங்கிணைப்பாளா், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா், சுகாதார ஊக்குநா்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணித்தொகை வழங்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.