செய்திகள் :

காஷ்மீர் தாக்குதல்: பயணத்தை பாதியில் முடித்துவிட்டு தில்லி திரும்பினார் மோடி!

post image

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து, செளதி பயணத்தை பாதியில் முடித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் இருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் பைசாரன் பள்ளத்தாக்கு உள்ளது. அடர்ந்த பைன் மரக் காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட இந்த இடம் "சிறிய ஸ்விட்சர்லாந்து' என்று அழைக்கப்படுகிறது.

இப்பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை கூடியிருந்தபோது, பைசாரன் மலையிலிருந்து புல்வெளி பகுதிக்குள் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொடூர தாக்குதலை நடத்தினர்.

இந்த கொடூர தாக்குதலில் 2 வெளிநாட்டவர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

இக்கொடூர தாக்குதலுக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட "லஷ்கர்-ஏ-தொய்பா' பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான "தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுள்ளது.

நாடு திரும்பினார் மோடி

அரசுமுறை பயணமாக செளதி அரேபிய சென்ற பிரதமர் மோடி, தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு புதன்கிழமை காலை தில்லி வந்தடைந்தார்.

முன்னதாக, இந்தத் தாக்குதலுக்கு கண்டனம், இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, "இக்கொடூர தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்களின் தீய செயல்திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்களின் உறுதி அசைக்க முடியாதது. அது இன்னும் வலுவடையும்' என்றார்.

இதையும் படிக்க : காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொலை: பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்

பாஜகவின் வெறுப்பு அரசியலே பெஹல்காம் தாக்குதலுக்குக் காரணம்: சஞ்சய் ராவத்

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாஜகவின் வெறுப்பு அரசியலே காரணம் என்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களுடன் பேசிய சஞ்... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது! - விராட் கோலி

பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது என விராட் கோலி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவ... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளின் வரைப்படங்கள் வெளியீடு!

பெஹல்காமில் தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளின் வரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.ஜம்மு - காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கண... மேலும் பார்க்க

பிஸ்மில்லா, பிஸ்மில்லா... பெஹல்காமில் காயமுற்றோரை மீட்ட முஸ்லிம் இளைஞர்கள்!

பெஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களை பிஸ்மில்லா, பிஸ்மில்லா என்று கூறிக்கொண்டே முஸ்லிம் இளைஞர்களும் இந்தப் பகுதி மக்களும் காப்பாற்றியதாகத் தாக்குதலில் கணவனைப் பறிகொடுத்த ஒரு பெண் தெரிவித்துள்ளார்.மேல... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா நக... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: பலியானோர் உடலுக்கு அமித் ஷா அஞ்சலி!

ஜம்மு - காஷ்மீரின் பெஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பலியானோர் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் பார்க்க