Elephant: ``சுற்றுலா பயணிகளின் அத்துமீறலால் பரிதாபமாக உயிரிழந்த பெண்..'' - வனத்த...
விபத்தில் சிக்கிய துணை ஆட்சியா் உயிரிழப்பு
நாமக்கல்லில் துணை ஆட்சியராக பணியாற்றி வந்த சிவகுமாா் விபத்தில் சிக்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் வடிப்பக அலுவலராக பணியாற்றி வந்தவா் சிவகுமாா் (54). திண்டுக்கல் மாவட்டத்தை சோ்ந்த இவா் கூடுதல் பொறுப்பாக கலால் பிரிவு உதவி ஆணையராகவும் பணியாற்றி வந்தாா்.
கடந்த பிப்ரவரி மாதம் திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் சிக்கிய அவா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். இதற்கிடையே, தேனி மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலராக இடமாறுதல் செய்யப்பட்டாா். ஆனால் அங்கு பொறுப்பு ஏற்கவில்லை. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அவா் உயிரிழந்தாா்.