ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : `பாஜக மையக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?’ - பரபர ...
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சாலை மறியல்
எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். நிகழாண்டிற்கான போட்டியை பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்த விழாக் குழுவினா் திட்டமிட்டுள்ளனா். ஜல்லிக்கட்டுக்கான அரசாணையில் எருமப்பட்டி பெயா் உள்ள நிலையில், அந்த போட்டியை அங்குள்ள பொன்னேரி கிராமத்தில் நடத்துவதற்கான முயற்சியை சிலா் மேற்கொண்டு வருகின்றனா்.
இதற்கு எருமப்பட்டி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததுடன், அரசாணையில் உள்ளபடி எருமப்பட்டியில் தான் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும், பொன்னேரியில் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி வியாழக்கிழமை எருமப்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து அங்கு வந்த எருமப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் யுவராஜன், சமரசம் செய்த பிறகும் மறியலில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்தாா். அவா்களிடம் சேந்தமங்கலம் வட்டாட்சியா் வெங்கடேஷ் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு கைதானவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.