தமிழகத்தில் ரூ.40 கோடியில் நவீன தொழில்நுட்ப மையங்கள் திறந்து வைப்பு!
ஜாக்கி ஜானின் ‘கராத்தே கிட் லெஜண்ட்ஸ்’ டிரைலர்!
நடிகர் ஜாக்கி ஜான் நடிப்பில் உருவான கராத்தே கிட் லெஜண்ட்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் ஜாக்கி ஜான், ஜேடன் ஸ்மித் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தி கராத்தே கிட் (The karate kid).
தற்போது, இயக்குநர் ஜோனதன் எண்ட்விஸ்ட் இயக்கத்தில் ஜாக்கி ஜான், பென் வாங் உள்ளிடோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கராத்தே கிட்: லெஜண்ட்ஸ் (karate kid: legends). இப்படத்திலும் சிறுவனுக்கு கராத்தே பயிற்றுவிக்கும் மாஸ்டராக ஜாக்கி ஜான் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி!
படம் அடுத்தாண்டு மே 30 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். அதிரடியான ஆக்சன் காட்சிகளும் நிதானமான பின்னணி இசையும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.