செய்திகள் :

ஜார்க்கண்டிலும் புல்டோசர் அரசியல்! தேர்தல் பிரசாரம் நிறைவு!

post image

ஜார்க்கண்ட் மாநில பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவினர் புல்டோசர் அரசியலை குறிப்பிட்டுப் பேசியுள்ளது இப்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நபர்களுக்கு எதிரான நடவடிக்கையாக, ஒரிரு மாநில அரசு நிர்வாகங்கள் புல்டோசர் வாகனங்களைப் பயன்படுத்தி மேற்கண்ட குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்களின் வசிப்பிடங்களை இடித்து தகர்க்கும் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. மாநில அரசுகளை கண்டித்துமிருந்தது.

இந்த நிலையில், புல்டோசர் அரசியலை தேர்தல் பிரசாரத்தில் பாஜகவினர் கையிலெடுத்துள்ளது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 38 தொகுதிகளில் நவம்பா் 20-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மேற்கண்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரம் இன்று(நவ. 18) மாலை நிறைவுற்றது.

அங்கு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, “ஜார்க்கண்ட்டில் ஆளுங்கட்சியினர் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துள்ளனர். பிரதமர் மோடி அளித்துள்ள பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.

வங்கதேச அகதிகள் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் ஊடுருவலையும் அவர்கள் ஆதரிக்கின்றனர். இது சிறுமிகளுக்கும், இங்குள்ள நிலத்துக்கும், உணவுக்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், இப்போது, புல்டோசர் ஆயத்தமாகி நிற்கிறது. அவர்கள் கொள்ளையடித்த பணத்தை மீட்பதற்காக புல்டோசர் தயார்!

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட காங்கிரஸ் இடையூறு அளித்தது. ஆனால், இப்போது, அடுத்த கட்டமாக, மதுராவில் கிருஷ்ணர் கோயிலைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.

ஜார்க்கண்ட்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு முடிந்ததும், சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய நாளில், ஜார்க்கண்ட்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ‘ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ஆர்ஜேடி’ இணைந்துள்ள இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா அல்லது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றுமா என்பதற்கான விடை தெரிந்துவிடும்.

10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள்: தில்லி முதல்வர்

புதுதில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து மாணவர்களின் உடல்நலனைக் கருத்திற்கொண்டு, 10, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் உள்பட அனைத்து மாணவர்களும் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டாம் எ... மேலும் பார்க்க

மணிப்பூர்: மேலும் 2 நாள்களுக்கு இணைய சேவை முடக்கம்!

மணிப்பூரில் வன்முறையால் இணையசேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், 7 மாவட்டங்களில் மேலும் 2 நாள்களுக்கு இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

தில்லியில் காற்று மாசு எதிரொலி: விமான சேவை பாதிப்பு!

புதுதில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் எதிரொலியாக, தில்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.தில்லியின் பெரும்பாலான இடங்களிலும், அடர்த்தியான புக... மேலும் பார்க்க

உ.பி.: மருத்துவமனை தீ விபத்து - மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு!

உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின்போது மீட்கப்பட்ட ஒரு குழந்தை, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளது.ஜான்சி அரசு மர... மேலும் பார்க்க

தாராவி நிலத்தை அரசு அதானிக்கு தாரைவார்க்கலாமா? - தேர்தல் பிரசாரத்தில் காங்.

தாராவி நிலத்தை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் தலைவர்களின் இன்றைய தேர்தல் பிரச்சாரப் பதிவுகள் அமைந்துள்ளன. மகாராஷ்டிரத்தில் மொத்தம் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு, வரும் நவ.20-ஆம் தேதி ஒரே கட்டம... மேலும் பார்க்க

தங்கம் விலை 9% சரிவு! நிபுணர்கள் கூறுவது என்ன?

தங்கத்தின் விலை அதன் உச்சபட்ச விலையிலிருந்து 9 சதவீதம் சரிந்துள்ளது. தங்கத்தின் இந்த தொடர் விலைச்சரிவை நிபுணர்களும் ஆதரிக்கின்றனர். அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கம் காரணமாக சர்வதேச சந்தையில் தங... மேலும் பார்க்க