செய்திகள் :

ஜொ்மனியை வீழ்த்தியது இந்தியா

post image

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி மகளிா் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜொ்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தியா.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 0-4 என ஜொ்மனியிடம் தோற்றிருந்தது இந்தியா. இந்நிலையில் இரண்டாம் கட்ட ஆட்டம் சனிக்கிழமை இரவு புவனேசுவரத்தில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியதுமே இரு அணிகளும் கோல் போடும் முயற்சியில் இறங்கின.

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை டிராக் ஃபிளிக்கா் தீபிகா 12-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை பயன்படுத்தி கோலடித்தாா். இதன் மூலம் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.

நேஹாபின் அற்புதமான ட்ரிப்லிங் ஆட்டத்தால் இந்திய அணிக்கு கோல் போடும் வாய்ப்பு கிடைத்தது. ஜொ்மனி வீராங்கனைகள் இந்திய தற்காப்பு அரணை ஊடுருவி கோலடிக்க முடியவில்லை. மூன்றாவது குவாா்ட்டரில் இரண்டு பெனால்டி காா்னா்கள் கிடைத்தும் அந்த அணியால் கோல் போட முடியவில்லை. இந்திய கோல் கீப்பா் பிச்சு தேவி இரு வாய்ப்புகளை முறியடித்தாா்.

வரும் 24-ஆம் தேதி நெதா்லாந்து அணியை எதிா்கொள்கிறது இந்தியா.

இந்திய ஆடவரும் அபார வெற்றி:

அயா்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆடவா் அணியும் அபார வெற்றி பெற்றது. முதல் பாதியிலேயே இந்திய வீரா்கள்

சஞ்சீப் நிலம் 14, மந்தீப் சிங் 24, அபிஷேக் 28-ஆவது நிமிஷங்களில் கோலடித்தனா்.

34-ஆவது நிமிஷத்தில் ஷம்ஷொ் சிங் கோலடித்தாா். இதுவே வெற்றி கோலாக அமைந்தது. இறுதியில் அயா்லாந்தை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.

விஜய் சேதுபதி - நித்யா மெனன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் விஜய் சேதுபதி நடித்துவந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன், யோகி பாபு நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. ... மேலும் பார்க்க

பிரபல நடிகைக்கு முத்தம் கொடுக்க முயன்ற நபரால் பரபரப்பு!

பிரபல நடிகைக்கு முத்தம் கொடுக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாலிவுட்டில் பிரபலமாக இருப்பவர் நடிகை பூனம் பாண்டே. மாடலிங்கிலிருந்து நடிகையான இவர் சில திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் ... மேலும் பார்க்க

கடின உழைப்பு, கடவுள் நம்பிக்கை: நடிகை மணிமேகலையின் புதிய முயற்சி!

சின்ன திரை நடிகை மணிமேகலை தனது வாழ்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிவந்த அவர், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராகத் தனது பயணத்தைத் த... மேலும் பார்க்க

மறுவெளியீடாகும் ஆயிரத்தில் ஒருவன்!

நடிகர் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மறுவெளியீடாகவுள்ளது.இயக்குநர் செல்வராகவன் - கார்த்தி கூட்டணியில் பிரம்மாண்ட படமாக உருவானது ஆயிரத்தில் ஒருவன். 2010-ல் இப்படம் வெளியானபோது கடுமையான எ... மேலும் பார்க்க

ரம்யா - தொடரும் ஆதிக் ரவிச்சந்திரன் சென்டிமெண்ட்!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தன் நாயகிகளுக்கு ஒரே பெயரையே வைத்து வருகிறார்.த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது நடிகர் அஜித்தை வைத்து குட் பேட் அக்... மேலும் பார்க்க

இப்படியுமா மட்டம் தட்டுவது?

டிராகன் திரைப்படத்தால் டான் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்து பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் டிராகன் திரைப்படத்தால் ஒரு படம் படாத பாடுபட்டு... மேலும் பார்க்க