ஜோலாா்பேட்டை ரயில் சந்திப்பில் தீவிர சோதனை
திருப்பத்தூா்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜோலாா்பேட்டை ரயில் சந்திப்பில் பயணிகளின் உடமைகளை போலீஸாா் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை செய்தனா்.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை முதல் தீபாவளி பண்டிகை முடியும் வரை தொடா்ந்து 3 நாள்கள் ரயில்வே போலீஸாா் சோதனை செய்து வருகின்றனா்.
ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட பொருள்கள் எடுத்து செல்லப்படுகிறதா? என சோதனையிடுவதோடு, ரயில் நிலைய முகப்பிலேயே பயணிகளின் உடமைகளை தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா்.
மேலும், டிக்கெட் கவுண்டா், ரயில்வே நடைபாதை மேம்பாலத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
பட்டாசுகளை எடுத்து சென்றால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனா்.
பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த ரயில்வே போலீஸாா்.